Skip to main content

Posts

Featured

தி ஒடிசி- ஒரு விமர்சனம்

கிறிஸ்டோஃபர் நோலனின் தி ஒடிஸி (The Odyssey) திரைப்படம் முழு உலகையும் மீண்டும் ஹோமரின் பால் ஈர்த் திருக்கும் என்றே எனக்குத் தோன்றியது. எந்த கிளாசிக் படைப்புகளை த்   திரைப்படமாக எடுத்தாலும் அதன் வாசகர்களுக்கு தங்களது அபிமான கதைகளை அதன் பிரமாண்டத்தை, சொற்கள் வெளிப்படுத்தும் அக நுணுக்கங்களை , கதாப்பாத்திரங்களை, திரையில் உயிருடன் பார்க்கும் ஆவலும் எதிர்பார்ப்பும் இருக்கும் அதேநேரத்தில் தங்களது மனத்தில் உள்ள பிம்பங்களை   அந்தத் திரைப்படம் கெடுக்காமல் இருக்க வேண்டும் என்ற அச்சமும் இருப்பது இயல்பே. ஹோமரை வாசித்த ஒருத்தியாக பண்டைய கிரேக்க கவிஞரின் ரசிகர்களைப் போலவே, நானும் சில அச்சங்களுடனேயே இத்திரைப்படத்தைக் காணச் சென்றேன்.   பெரிய திரையறிவோ திரைப்படங்களில் ஆர்வமோ இல்லாத எனக்கு   பாலிஃபிமஸ்(Polyphemus) எனப்படும்   ஒற்றைகண் சைக்கிளாப்சையும், சைரன்களையும் , லாஸ்ட்டிரிகன்ஸ்( Laestrygonians ) என்றழைக்கப்பட்ட   கவசமணிந்த நரமாமிசம் உண்ணும் அரக்க க் கும்பலையும் எவ்வாறு   ஒரு திரைப்படத்தில் சித்தரி்த்து விடமுடியும்   என்ற எதிர்பார்ப்பின்   குறுகுறுப்பும் ...

Latest posts

மறதியின் மலர்- இஷிமு ஷிகிபு கவிதைகள் குறித்து