வளரும் ஊர்
1. வளரும் ஊர்
விடுமுறை முடிந்து
வீட்டிற்கு கிளம்பும் போது
பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக்கொடுத்தாள் அம்மா.
ஊர் தண்ணீர்.
வழியில் குடித்துவிட்டு
மீதம் வைத்திருந்ததை
வந்துசேர்ந்ததும்
பால்கனியில் வாடிக்கிடந்த
தொட்டிச்செடிக்கு ஊற்றினேன்
காலையில்தான் கவனித்தேன்
புதிதாய் துளிர் விட்டிருந்தது.
இப்போது என் வீட்டுத் தொட்டியில்
ஊர் வளர்கிறது.
Comments
Post a Comment