நாள் - 09
மதுரை மீனாட்சியம்மன் கோவில். அம்மனைத் தரிசித்தபின் சுந்தரேசுவரர் சன்னதிக்குச் சென்றேன். நடை சாத்தும் நேரம் என்பதால் சன்னதியில் யாரும் இல்லை. அய்யன் விச்ராந்தியாகத் தனிமையில் இருந்தார். மனைவி அரசாள எந்தப் பெர்ஃபாமன்ஸ் பிரஷருமின்றிச் சுவாமி அலட்டிக்கொள்ளாமல் சாவதானமாக இருப்பதை மதுரையில் மட்டுமே உணரமுடியும் .
பட்டர் அர்த்தசாம வழிபாட்டிற்காகச் சுவாமியைத் தயார் செய்தார். முகம் கொள்ளாச் சிரிப்புடன் சுவாமி அம்மன் சன்னிதிக்குள் நுழைய, அம்மன் வெண்பட்டுடுத்தி பிரத்யேக அலங்காரத்துடன் அவரை எதிர்கொண்டாள்.
சன்னதியில் பட்டர்கள், ஓதுவார்கள், வாத்தியக்காரர்கள் தவிர இருவர்தான் இருந்தோம். அந்த முதியவர் தன் மெலிந்த கைகளைக் கூப்பிய வண்ணம் நின்றிருந்தார். காற்றில் நைவேத்தியப் பாலின் ஏலக்காய் மணமும் , நாதஸ்வரத்தின் இசையும் கலந்து படுரம்மியமான சூழல். திடீரென ஓதுவார் அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துப் பாட அத்தனையும் ஒருநிமிடம் அசைவற்றுப் போனது. பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் கண்கள் கசிய “தீர்க்காயுசா இருங்கோ”என சுவாமி அம்பாளைக் கைதூக்கி வாழ்த்தினார். கனிந்த மனத்தின்முன் இறை பணிந்தது.

Comments
Post a Comment