நாள் 1
1/100
சிறுவயதிலிருந்து எனக்கு ஒரு பழக்கமுண்டு. இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மேல் என் விருப்பத்தை ஏற்றுவது, இது நடந்தால் அது நடக்குமென இரண்டு தொடர்பில்லாத நிகழ்வுகளைத் தொடர்புபடுத்தக்கொள்வது.
நான் பள்ளிக்குப் போகும் வழியில் பெரிய தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்று இருக்கும் . அந்தத் தோட்டத்தில் பல நிறங்களில் ரோஜாக்கள் தினமும் பூத்திருக்கும். தேர்வு தினங்களில் அந்த வீட்டுச் செடியில் மூன்று பன்னீர் ரோஜாக்கள் பூத்திருந்தால் அன்றைய தேர்வில் நான் தொண்ணூறு மதிப்பெண்களுக்கு மேல் வாங்கி விடுவேன், அப்பா நீலச் சட்டை அணிந்திருந்தால் வேதியியல் ஆசிரியை வசந்தா விடுப்பு எடுப்பார்கள் என இப்படிச் சம்பந்தமில்லாத இரண்டு விஷயங்களைச் சம்பந்தம் செய்து கொள்வேன். இன்று ஆசான் “நூறு நாள்கள் நூறு சொற்கள்” என்று ஒரு பணியைக் கொடுத்திருக்கிறார்.
இதை நிறைவேற்ற முடிந்தால், அடுத்த வருடம் என் சிறுகதைத் தொகுப்பு வெளிவருமென மனத்துக்குள் முடிந்து வைத்துக்கொள்கிறேன். ரிதம் சரியாக அமையட்டும்.
Comments
Post a Comment