நாள் - 014
மாலை ஆறரை மணியிருக்கும். பரபரப்பான நகரச்சாலையை செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள். வாகன நெரிசல் காரணமாக நான் அமர்ந்திருந்த பேருந்து பனிப்பாறைகள் உருகும் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. சாலையோரம் வீற்றிருந்த ஆலயத்திலிருந்து எழுந்த மணியோசையும்
பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் ஒருவர் சட்டெனச் செய்துகொண்டிருந்தை நிறுத்திவிட்டுத் தன் பூட்ஸ்களைக் கழட்டினார். ஆலயமிருந்த திசைநோக்கித் திரும்பியவர் நின்ற இடத்திலிருந்தே தலைக்குமேல் தன் கைகளைக்கூப்பி வணங்கினார் அவர் கண்மூடி நின்றிருந்த அதே கணத்தில் கோயிலிலிருந்து ஒரு பெண்மணி வெளியே வந்தார்.
கண்மூடி நின்றவரைப் பார்த்து அவருக்கென்ன என்ன தோன்றியதோ , தொழிலாளரின் அருகில் சென்றவர், “இந்தாப்பா” என்றபடியே தன் கையிலிருந்த திருநீற்றை அவரது நெற்றியில் இட்டார். நன்றியோ, வியப்போ எதுவோ ஒன்று முகத்தில் துலங்க அந்த நெடிய உருவம் பாதியாய் மடிந்து அந்த ஒரு கீற்றுக் கருணையைப் பெற்றுக்கொண்டது . பார்த்துக்கொண்டிருந்த நானும் ஆசிர்வதிக்கப்பட்டேன். தெய்வங்கள் கோயில்களில் மட்டுமே உறைவதில்லை.

Comments
Post a Comment